அமெரிக்காவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஆல்பர்ட் - கெல்லி தம்பதியினருக்கு இடியாக ஜனவரி மாதம் வந்து இறங்கியது. மருத்துவ சோதனையில் கெல்லிக்கு மார்பு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. என்றாலும் தன் மனைவி சோர்ந்து போகாமல் இருக்க உன்னுடனே நான் இருப்பேன் என்று உறுதி அளித்து ஒவ்வொரு தடவை கீமோதெரபி செய்யும்போதும் உடன் சென்றார்.
கரோனா தீவிரமடைந்த பின் அவரை மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி தர முடியாத சூழல் ஏற்பட்டது. என்றாலும் தன் மனைவிக்கு உறுதி அளித்து விட்டோமே என்று அவர் இருக்கும் அறை ஜன்னலில் இருந்து தெரியும் சாலையில் அமர்ந்து
அவருக்கு உற்சாகமூட்டினார்.
பாலின சுதந்திரம் என்று பிரியமானவருக்கு துரோகம் செய்து பலருடன் தொடர்பு வைத்து வாழ்வது எளிது. ஆனால் பிரியமானவரை ஏமாற்றாமல் உண்மையாக வாழ்வது மிக கடினமான ஒன்று.
No comments:
Post a Comment