Saturday, May 16, 2020

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி கந்தர்வகோட்டை 2020 - 2021 மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுக்கா, புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர்  பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் திரு. தமிழ் செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. கல்லூரியின் 2020 - 21 ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதலாமாண்டு சேரவும், பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ITI முடித்தவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டு சேரவும் விண்ணப்பிக்கலாம். கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 2152/- மட்டுமே ( கல்விக்கட்டணம், சிறப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணம் உட்பட).

இந்த கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் & கணிப்பொறியியல் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் பயிற்று விக்கபடுகிறது. ஒவ்வொரு பாட பிரிவிலும் முதலாமாண்டு சேர்க்கைக்கு 60 இடங்களும், இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்.

1. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினி. 

2. மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர்/ ஆதி திராவிடர்/ பழங்குடி இனத்தவர் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை.

3. சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை.

4. முதலாமாண்டு மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம்.

5.கட்டணமில்லா பேருந்து பயண சீட்டு.

சேர்க்கை முறை:

 பட்டயபடிப்பிர்க்கு பெறப்படும் விண்ணப்பங்களில் மாணவர் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு இனசுழற்சியின் அடிப்படையில் தமிழக அரசு விதி முறைகளின்படி கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறும். 

கல்லூரி விபரம்:

1. இக்கல்லூரி 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

2. அனைத்து துறைகளுக்கும் தனித்தனியே smart class வசதி உள்ளது.

3. மாணவ / மாணவிகள் சிறந்த செய்முறை பயிற்சி பெற அனைத்து துறைகளிலும் Fully furnished laboratory/ Workshop / Computer lab வசதி உள்ளது.

4. மாணவர்களுக்கும்/ மாணவிகளுக்கும் தனித்தனியே பயிலக வளாகத்திற்குள் விடுதி வசதி உள்ளது.

5. பட்டயப் படிப்பு முடித்த மாணவ மாணவியர் மாதம் ரூபாய் 15 ஆயிரம் ஊதியம் வரை பல்வேறு நிறுவனங்களில் வளாக நேர்முகத் தேர்வு மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

6. மூன்று ஆண்டு பட்டய வகுப்பு தேர்ச்சி பெற்றபின் பொறியியல் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெறலாம்.

மேலும் இக்கல்லூரியின் முதல்வர் திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் இச் சலுகைகளை பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

தொடர்பிற்கு 
அரசு பாலிடெக்னிக் கல்லூரி கந்தர்வகோட்டை
தொலைபேசி எண் 04322 275289


Thursday, May 7, 2020

கொரானா பீதியிலும் மனைவிக்காக மருத்துவமனை வெளியே ஒரு உண்மை காதல்

அமெரிக்காவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஆல்பர்ட் - கெல்லி தம்பதியினருக்கு இடியாக ஜனவரி மாதம் வந்து இறங்கியது.  மருத்துவ சோதனையில்  கெல்லிக்கு மார்பு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. என்றாலும் தன் மனைவி சோர்ந்து போகாமல் இருக்க உன்னுடனே நான் இருப்பேன் என்று உறுதி அளித்து ஒவ்வொரு தடவை கீமோதெரபி செய்யும்போதும்  உடன் சென்றார். 

கரோனா தீவிரமடைந்த பின் அவரை மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி தர முடியாத சூழல் ஏற்பட்டது. என்றாலும் தன் மனைவிக்கு உறுதி அளித்து விட்டோமே என்று அவர் இருக்கும் அறை ஜன்னலில் இருந்து தெரியும் சாலையில் அமர்ந்து 
அவருக்கு உற்சாகமூட்டினார். 

பாலின சுதந்திரம் என்று பிரியமானவருக்கு  துரோகம் செய்து பலருடன் தொடர்பு வைத்து வாழ்வது எளிது. ஆனால் பிரியமானவரை ஏமாற்றாமல் உண்மையாக வாழ்வது மிக கடினமான ஒன்று.

Wednesday, May 6, 2020

ஆந்திராவில் இருந்து வரக்கூடிய தகவல்கள் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையிலிருந்து இன்று காலை வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. வாயுக்கசிவு ஆலை அமைந்துள்ள பல மீட்டர் பகுதிகளில் பரவி உள்ளது.

மூன்று பேர் மரணம். ஆங்காங்கே மக்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். சில கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள ஊர்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு. சிலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Sunday, May 3, 2020

Even after lockdown is lifted take all precautions

1. Mask.
2.Hand sanitisation.
3.social distance.
4. Dont go out unless it is absolute necessary.
5. Don't grow beard.
6. Don't go to barber shop. Either do it yourself or call the barber to your home. Let him wear mask clean his hands. Use your own instruments like scissors etc.
7. Dont wear belt, rings, wrist watch, when you go out. Watch is not required. Your mobile has got time.
8. No hand kerchief. Take sanitiser & tissue if required.
9. Don't bring the shoes into your house. Leave them outside.
10. Clean your hands & legs when you come home from outside.
11.when you feel you have come nearer to a suspected patient take a thorough bath.

Lockdown or no lockdown next 6 months to 12 months follow these precations.
Share this with all your family & friends.

Saturday, May 2, 2020

தலைகீழ் பொறியியல் Reverse engineering: சானிட்டீசரில் இருந்து மதுபானம் தயாரித்ததற்காக மத்திய பிரதேச மனிதர் கைது செய்யப்பட்டார்

மத்திய பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் சனிடரைசர் திரவத்திலிருந்து மதுபானம் தயாரித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.  கை சுத்திகரிப்பாளர்களின் முக்கிய அங்கமாக ஆல்கஹால் உள்ளது.  குற்றம் சாட்டப்பட்டவர் சுல்தான்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போரியா கிராமத்தில் வசிக்கும் இந்தல் சிங் ராஜ்புத் என போலீசார் தெரிவித்தனர்.

தற்போது கொரோன மூடல் காரணமாக மாநிலத்தில் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன.  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக தேவை உள்ள சானிட்டீசர்களை தயாரிக்க மாநிலத்தில் பல டிஸ்டில்லரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  காவல்துறையினரின் கூற்றுப்படி, ராஜ்புத் 72 சதவீத ஆல்கஹால் கொண்ட  சானிடைசரில் இருந்து மதுபானம் தயாரித்தார்