Saturday, May 16, 2020

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி கந்தர்வகோட்டை 2020 - 2021 மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுக்கா, புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர்  பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் திரு. தமிழ் செல்வம் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. கல்லூரியின் 2020 - 21 ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதலாமாண்டு சேரவும், பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ITI முடித்தவர்கள் நேரடி இரண்டாம் ஆண்டு சேரவும் விண்ணப்பிக்கலாம். கல்லூரி ஆண்டு கட்டணம் ரூ 2152/- மட்டுமே ( கல்விக்கட்டணம், சிறப்பு கட்டணம் மற்றும் வளர்ச்சி கட்டணம் உட்பட).

இந்த கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் & கணிப்பொறியியல் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் பயிற்று விக்கபடுகிறது. ஒவ்வொரு பாட பிரிவிலும் முதலாமாண்டு சேர்க்கைக்கு 60 இடங்களும், இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்.

1. கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச மடிக்கணினி. 

2. மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/  மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர்/ ஆதி திராவிடர்/ பழங்குடி இனத்தவர் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை.

3. சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை.

4. முதலாமாண்டு மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம்.

5.கட்டணமில்லா பேருந்து பயண சீட்டு.

சேர்க்கை முறை:

 பட்டயபடிப்பிர்க்கு பெறப்படும் விண்ணப்பங்களில் மாணவர் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு இனசுழற்சியின் அடிப்படையில் தமிழக அரசு விதி முறைகளின்படி கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெறும். 

கல்லூரி விபரம்:

1. இக்கல்லூரி 2013 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

2. அனைத்து துறைகளுக்கும் தனித்தனியே smart class வசதி உள்ளது.

3. மாணவ / மாணவிகள் சிறந்த செய்முறை பயிற்சி பெற அனைத்து துறைகளிலும் Fully furnished laboratory/ Workshop / Computer lab வசதி உள்ளது.

4. மாணவர்களுக்கும்/ மாணவிகளுக்கும் தனித்தனியே பயிலக வளாகத்திற்குள் விடுதி வசதி உள்ளது.

5. பட்டயப் படிப்பு முடித்த மாணவ மாணவியர் மாதம் ரூபாய் 15 ஆயிரம் ஊதியம் வரை பல்வேறு நிறுவனங்களில் வளாக நேர்முகத் தேர்வு மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

6. மூன்று ஆண்டு பட்டய வகுப்பு தேர்ச்சி பெற்றபின் பொறியியல் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர்க்கை பெறலாம்.

மேலும் இக்கல்லூரியின் முதல்வர் திரு தமிழ்ச்செல்வன் அவர்கள் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்கள் இச் சலுகைகளை பயன்படுத்தி தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

தொடர்பிற்கு 
அரசு பாலிடெக்னிக் கல்லூரி கந்தர்வகோட்டை
தொலைபேசி எண் 04322 275289


No comments:

Post a Comment