Wednesday, May 6, 2020

ஆந்திராவில் இருந்து வரக்கூடிய தகவல்கள் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கிறது

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஆர்.ஆர்.வெங்கடாபுரம் கிராமத்தில் எல்ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த ஆலையிலிருந்து இன்று காலை வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. வாயுக்கசிவு ஆலை அமைந்துள்ள பல மீட்டர் பகுதிகளில் பரவி உள்ளது.

மூன்று பேர் மரணம். ஆங்காங்கே மக்கள் மயக்கமடைந்து கீழே விழுந்தனர். சில கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள ஊர்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு. சிலர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment